• Jul 25 2025

அவன் என்ன பண்ணி கிழிச்சிட்டான் அவனை யாருக்கும் தெரியாது- விஜய்யை தாறுமாறாக திட்டிய மீராமிதுன்- செம கடுப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல மாடலாக இருந்தவர் நடிகை மீரா மிதுன்.  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபல்யமானார். இது தவிர இவர் நடிகர்கள் மற்றும் நடிகைகளை அவதுாறாகப் பேசி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். அதனை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு பட்டியலினத்தவர்கள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பேசியிருந்தார் 

இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 


ஆனால் ஜாமீனில் வெளியே வந்த பிறகு நடிகை மீரா மிதுன் மீண்டும் ஆஜராகவில்லை. அடிக்கடி இருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டு அவர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மீரா மிதுன், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும் குடும்பத்தினர் கூட உதவி செய்யவில்லை என்றும் கண்ணீர் விட்டார். 

இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அதில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் மீரா மிதுன். அப்போது நெறியாளர் மீரா மிதுனை நடிகர் விஜய்யுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.இதைக்கேட்டு கடுப்பான மீரா மிதுன், கெட்ட வார்த்தையில் ஆபாசமாக பேசுகிறார். 


ஆனால் நெறியாளர் விஜய்யின் ஸ்டார் எவ்வளவு பெரியது தெரியுமா என விளக்குகிறார். அப்போது குறுக்கிடும் மீரா மிதுன், என்ன பெரிய ஸ்டார்டம்ல இருந்து கிழிச்சிட்டான் அவன்? நானும் அவனும் ஒன்னா? அவன் படம் எல்லாமே ஃபிளாப். அவனை நேஷனலாகவோ  இண்டர்நேஷனலாகவோ யாருக்குமே தெரியாது என தாறுமாறாய் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement