• Jul 26 2025

லீக்கான சம்யுக்தாவின் ஆடியோவை வெளியிட்டது வேறு யாரும் இல்லை... இந்த இயக்குநர் தான்... வெளியான ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபல சீரியல்களில் ஒன்று 'சிப்பிக்குள் முத்து'. இதில் நடித்து பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் தன்னுடன் இந்த சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பிரிவிற்கு காரணம் ரவி தான் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. 


அதாவது இந்த ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர் தான். உண்மையாகவே நிஜத்தில் இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சம்யுக்தாவிடம் இருவரும் எல்லை மீறி இருக்கிறார். இதனால் தங்கள் இருவருக்கும் பொதுவான நபர்களிடம் ரவி குறித்து தெரிவித்து இருக்கிறார் சம்யுக்தா. இந்த ஆடியோவை விஷ்ணுகாந்த் லீக் செய்திருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து சம்யுக்தாவின் இந்த ஆடியோவை வெளியிட்ட அந்த நபர் யார் என்ற கேள்வியும் பலரிடம் இருந்து வந்தது. இந்நிலையில் அது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது அவர் வேறு யாரும் இல்லை இயக்குநர் ஹரிஷ் என்பவர் தான். 

இவர் சம்யுக்தா மற்றும் ரவி நடித்த ‘நிறைமாத நிலவே’ தொடரை இயக்கியவர் ஆவார். இவரை தனது உடன்பிறந்த அண்ணன் போல நம்பி சம்யுக்தா அனைத்தையும் ஓப்பனாக சொல்லி இருக்கிறார். ஆனால், இவர் தான் இவரிடம் பேசிய விஷங்களை ரெகார்ட் செய்து விஷுகாந்த்திடம் கொடுத்து இருக்கிறார்.

Advertisement

Advertisement