• Jul 25 2025

இதுவரை ஒரு வார்த்தைக் கூட கேட்கல... எமோஷனலான ஏடிகே, விக்ரமன்... கண்கலங்கிய மைனா- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.மீதமிருக்கும் 10 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கை விளையாடி வருகின்றனர்.இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மைனா நந்தினி எவிக்சன் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அநத் வகையில் 72ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். அந்த வகையில் இந்த வாரம் பாடசாலை டாஸ்க் நடைபெற்றது. இதனால் ஹவுஸ்மேட்ஸில் அசீம் விக்ரமன் அமுதவாணன் ஆகியோர் ஆசிரியர்களாகவும் மைனா நந்திதி மணிகண்டன் ஏடிகே ஷிவின் ரச்சிதா கதிரவன் தனலக்ஷ்மி ஆகியோர் மாணவர்களாக இருந்தார்கள்.


இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் சூப்பராக விளையாடி வருகின்றனர். அத்தோடு அந்த வகையில் முதலில் விக்ரமன் தான் வகுப்பு எடுத்தார்.இதில் விக்ரமனின் மகன் ஏடிகேவின் அப்பா என்ற காரக்டரையும் பண்ணியிருந்தார். அதே போல அமுதவாணன் பெஸ்ட் ஆசிரியாகத் தேர்வாகினார்.

மேலும் இந்த டாஸ்கிற்காக ஹவுஸ்மேட்ஸ் தமது லுக்குகளை மாற்றிக் கொண்டு அழகாக நடித்தனர். இதனால் மைனா நந்தினி அமுதவாணன் கதிரவன் ஆகியோர் பெஸ்ட் பொஃபோமராகத் தெரிவு செய்யப்பட்டதோடு இன்றைய தினத்தில் இவர்கள் ஆசிரியராக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

தொடர்ந்து கனாக் காணும் காலங்கள் என்னும் டாஸ்க் நடைபெற்றது. இதில் பள்ளிக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை ரச்சிதா ஏடிகே விக்ரமன் ஆகியோர் தான் முதலில் பகிர்ந்து கொண்டனர்.குறிப்பாக இதில் இவர்கள் தமது பெற்றோர் குறித்து பேசியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement