• Jul 26 2025

இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன் லவ் யூ அப்பா- தந்தை மறைவால் மனமுருகும் மகேஷ்பாபு-வைரலாகும் பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் மகேஷ்பாபு.இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி கடந்த 14 ஆம் தேதி காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் எதிர்பாராத விதமாக இறப்புக்குள்ளானார்.80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். அத்தோடு  கடந்த 2009ம் ஆண்டு இவருக்கு பத்மபூசன் விருதும் கிடைத்தது.


இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள பதிவில்,"உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது... உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது.அதுதான் உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சலும் தைரியமும் உங்கள் இயல்பு. எனது உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள். நான் எதிர்பார்த்திருந்தது அனைத்தும் அப்படியே மறைந்துவிட்டன.

 ஆனால் வினோதமாக, இதுவரை நான் உணராத இந்த வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன். உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்களது மரபை முன்னெடுத்துச் செல்வேன்.உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ அப்பா.. மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க செய்திருக்கிறது.





Advertisement

Advertisement