• Jul 25 2025

இன்னும் சில ஆண்டுகளில் ரஜினியை மறந்து விடுவீர்கள் ஆனால் கமல்ஹாசன் அப்படி கிடையாது- சர்ச்சையைக் கிளப்பிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இரு துருவங்களாக விளங்குபவர்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். சினிமாவில் களமிறங்கிய புதில் இருவரும் இணைந்த பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அதிலும் பெரும்பாலும் கமல் ஹுரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்து வந்தார்.

இதன் பின்னர் ரஜினிக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் இருவரும் அவரவர் பாதையை தேர்ந்தெடுத்து தனித்தனியே பயணிக்க ஆரம்பித்தார்கள்.


இந்நிலையில், பிரபல நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ' கமல் ஹாசன் செய்த சாதனைகள் பல, அன்பே சிவம், மைக்கல் மதன காமராஜ், விருமாண்டி என பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை அடுத்த 10 வருடத்திற்கு பிறகு அனைவரும் மறந்துவிடுவார்கள். ஆனால், கமல் ஹாசன் அப்படி கிடையாது ' என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது சமூக வலைத்தளத்தில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement