• Jul 25 2025

இப்போது தான் நான் நானாக இருக்கிறேன்: அந்த விடயம் பற்றி மனம் திறந்த ராஜா ராணி நடிகை!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் அடுத்தடுத்து தொடங்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது.அவ்வாறு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் ராஜா ராணி 2. அதில் ஆல்யா மானசாவிற்கு பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ரியா விஸ்வாநந்தா.

ரியா தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.மேலும் அவர் தனது சிறந்த நடிப்பு திறமை மற்றும் குறிப்பிடத்தக்க நடிப்பு மூலம் தமிழ் தொலைக்காட்சி துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

ரியா ஒரு மாடலாகவும் நடனக் கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் அவரது நடிப்பால் பிரபலமடைந்தார்.புது சீரியலால் குஷியில் இருக்கும் ராஜா ராணி நடிகை.



மேலும் அவர் தமிழ் தொலைக்காட்சி தொடரான ​​ராஜா ராணி 2 சந்தியா என்றக் கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கிறார். ராஜா ராணி 2 தவிர, ஜீ தமிழில் சண்டக்கோழி தமிழ் சீரியலிலும் நடித்துள்ளார்.   

சண்டக்கோழி சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அவரை நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்த போது அவர் பல தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். 

அதாவது அதில் அவர் புதிய சீரியல் பற்றி பல விடயங்களைப் பகிர்ந்துக் கொண்டார். ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியதற்குப் பிறகு ஒரு வாரம் கழி்த்து தனக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்த சீரியலில் தனது குணத்தை அப்படியே வெளிப்படுத்தியதாகவும் இந்த சீரியல் தனக்கு ரொம்பவே பிடித்திருப்பதாகவும் தெரிவித்திக்கிறார். 

மேலும் இது தொடர்பில் இன்னும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.அதாவது இப்ப தொடங்கிய சீரியல் எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது.அதாவது முதல் சீரியலில் உடலாலும் மனதாளும் அதுக்காவே இருந்தேன்.ஆனால் இதுக்கு என்னுடைய இஸ்டம் படி நடிக்கின்றேன்.என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement