• Jul 26 2025

கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்- கவலையில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது திரைப்படங்களை இயக்குவது பாடல்கள் எழுதுவது ,  பாடல் பாடுவது,எனப் பன்முகத் திறன் கொண்ட நடிகராக விளங்குபவர் தான் கமல்ஹாசன். இவர் தற்பொழுது விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதனை அடுத்து தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.இந்த சூழலில்தான்,  நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 


தற்போது இவைகுறித்த உண்மை தகவல்கள் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.அதன்படி சென்னை போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நவம்பர் 23-ஆம் தேதி லேசான காய்ச்சல், ஜலதோஷம், இருமல் உள்ளிட்டவற்றுடன் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் தற்போது அவர் நலமுடன் தேறி வருகிறார் என்றும், ஒன்றிரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement