• Jul 26 2025

நடிகை தீபிகா படுகோன் கட்டிய புதிய வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரகாஷ் படுகோன் என்னும் தொழிலதிபரின் மகள் தான் தீபிகா படுகோன்.இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய கன்னட படத்தில் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அறிமுகமாகினார். இதனை அடுத்து ஹிந்தியில் ஓம் சாந்தி ஓம் என்னும் திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார்.

பாலிவூட்டில் கலக்கி வரும் நடிகையான அவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துள்ளார்.நடிப்பது மட்டுமன்றி பிஸ்னஸ்களிலும் இருவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமது நிறுவனம் மூலமாக பல ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் தீபிகா பேஷன் மற்றும் காஸ்மெடிக்ஸ் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

தீபிகா, ரன்வீர் இருவருமே இப்படி பிசியாக இருந்து வரும் நிலையில் மற்றொரு புறம் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார்கள்.அவர்கள் பல அடுக்கு கொண்ட ஒரு வீட்டை கட்டி வரும் நிலையில், அதன் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement