• Jul 24 2025

''அய்யோ சார் உங்களை யார்னு எனக்கு தெரியாதுங்க''.. கிரிக்கெட் வீரரிடம் ஓபனாக பேசிய எஸ்.ஜே.சூர்யா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அதன் பிறகு குஷி படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகி அஜித், விஜய் ஆகியோரின் கெரியரில் சிறந்த படங்களாக விளங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கிரிக்கெட் தனக்கு சுத்தமாகவே தெரியாது என கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "ஒருமுறை ஹைதராபாத்தில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பார்க் ஹயாத் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் எதார்த்தமாக என்னை பார்த்தார். உடனே என்னிடம் வந்த அவர் என்னிடம் ஒரு ஹலோ சொன்னார். பிறகு நான், அவர், அவர் மனைவி, குழந்தை நான்கு பேரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.



புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பும்போது என்னுடைய உதவி இயக்குநர்கள் வந்து சார் நாங்களும் ஒன்னு எடுத்துக்குறோம் என என்னிடம் கேட்டார்கள். ஏண்டா இப்போ என நான் கேட்டேன். உடனே அவர்கள் உங்களுடன் இல்லை சார் அவருடன் என்றனர். பதறிய நான் யார் அவரு என்று கேட்டேன்.

சார் அவர் கிரிக்கெட் ப்ளேயர் என்று கூறினார்கள். அதனையடுத்து நான் நடராஜனிடம் சென்று அய்யோ சார் உங்களை யார்னு எனக்கு தெரியலனு சொல்லி உங்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டு நான் இன்னொரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Advertisement

Advertisement