• Jul 24 2025

ஓ நீ அட்வகேட்-ஆ"- நீதி மன்ற டாஸ்க்கில் அசீமை மோசமாக நடத்தும் ஹவுஸ்மேட்ஸ்- நக்கலடிக்கும் மைனா நந்தினி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது ஆரம்பமாகி 7 வாரங்களைக் கடந்துள்ள நிலையில் இந்த வாரம் நீதிமன்றம் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம்.


 இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.முன்னதாக, பிக்பாஸ் வீட்டினுள் அரண்மனை டாஸ்க் நடைபெற்றது. அப்போது, அசீம் - ADK இடையே வாக்குவாதம் நடந்தது. 

 இந்நிலையில், இதுகுறித்து அசீம் மீது வழக்கு போடுவதாக ADK கேமரா முன்னர் சொல்லியிருக்கிறார். அரண்மனை டாஸ்க்கில் நடைபெற்ற சாவி திருட்டு சம்பவம் தொடர்பாக அசீம் மீது தான் வழக்கு போடுவதாக ADK குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தன்மீது போடப்பட்டுள்ள வழக்கை தான் ஏற்பதாகவும், இதுகுறித்த கோர்ட் விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாகவும் அசீம் தெரிவித்திருக்கிறார்.


இதன் பின்னர், கார்டன் பகுதிக்கு நடந்து செல்லும் போது அசீமிடம் கேஸை மைனாகிட்ட கொடுக்கும்படி சொல்கிறார் அமுதவாணன். பின்னர், அங்கே இருந்த மைனா நந்தினியை அழைக்கிறார் அசீம். 'யாரும் டிஸ்கஷன் பண்ணகூடாது-ன்னு சொல்லிருக்காங்க' என கூறியபடியே மைனா அருகில் வருகிறார். அப்போது அசீம், "கேஸ் பத்திதான் பேசக்கூடாது. அட்வகேட் கிட்ட எப்படி பேசுறது?" என்கிறார்.

உடனே மைனா,"ஓ நீ அட்வகேட்-ஆ" என கேட்க, தனக்கு அட்வகேட்-ஆக இருக்கும்படி மைனாவிடம் சொல்கிறார் அசீம். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன மைனா, சிரித்தபடியே 'நான் வரல' என்கிறார். அப்போது அவரை அசீம் சமாதானப்படுத்த முயல்கிறார் ஆனால் மைனா நந்தினி நக்கலாக சிரித்து விட்டு சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement