• Jul 25 2025

ரீ யூனியன் நிகழ்ச்சியில் நடனத்தில் பொளந்து கட்டிய ராதா..! - அசரவைக்கும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

80களில் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்த தென்னிந்திய திரைபிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களின் ரீ-யூனியன்  நிகழ்ச்சி  மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த வாரம்  மும்பையில் நடந்தது.இதில் பாலிவூட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ரீ யூனியன் நிகழ்ச்சியின் போது ஒரே நிறத்தின் உடை அணிந்து அந்த நாளை, குதூகலமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு சில்வர் மற்றும் ஆரஞ்சு நிற உடையில் நடிகர் நடிகைகள் ஜொலித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் ஸ்பெஷல் உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு...நாள் முழுவதும் ஆட்டம் பாட்டம் என களைகட்டியது நிகழ்ச்சி.


விடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  விளையாட்டு மற்றும் வினாடி வினா உள்ளிட்டவைக்கு பூனம் தில்லான் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அதே போல் நடிகைகள் சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, ராதா, அம்பிகா பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி,  மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதா தன்னுடைய 57 வயதிலும் நளினமான நடன அசைவுகளை வெளிப்படுத்தும் விதமாக டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement