• Jul 24 2025

டிடிஎப் வாசன் கார் மோதியதில் நபர் ஒருவர் காயம்- உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீஸார்

stella / 2 years ago

Advertisement

Listen News!


யூடியூப் பிரபலமாக வலம் வருபவர் தான்  டிடிஎப் வாசன். இவர் யூடியூப்பில் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டு பேமஸ் ஆனவர்.அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்ட டிடிஎப் வாசன், போலீசிடமும் சிக்கி அதற்காக கோர்ட், கேஸ் என அலைந்துள்ளார்.

யூடியூப்பில் கிடைத்த புகழைத் தொடர்ந்து தற்பொழுது திரைப்படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். அதன்படி தமிழில் இவர் நடிப்பில் உருவாகும் முதல் படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் பூஜை கடந்த ஜூன் 29-ந் தேதி அவரின் பிறந்தநாள் அன்று சென்னையில் நடைபெற்றது. 


மஞ்சள் வீரன் படத்தில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்மஞ்சள் வீரன் பட விழாவை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது பேசிய டிடிஎப் வாசன், தான் பைக் ரைடு சென்றுவிடுவதால், ஒரு சில நேரம் காஷ்மீர்ல இருப்பேன், ஒரு சில நேரம் நாக்பூர்ல இருப்பேன் என்று சொல்லும்போது இடையில் குறுக்கிட்ட கூல் சுரேஷ், ஒரு சில நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பாரு என தக் லைப் பதில் அளித்திருந்தார்


இந்த நிலையில் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று காலை டிடிஎப் வாசன் வந்த கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்தவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார் டிடிஎப் வாசன். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து காவலர்கள் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement