• Jul 25 2025

வாஃவ் வாரிசு படம் பற்றி ஒன்னுல்ல இரண்டில்ல மூன்று அப்டேட்- செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. இவர்களுடன் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.அத்தோடு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதனை அடுத்து ரசிகர்கள் எப்போது ட்ரெய்லர் வரும் என்று ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 4ம் திகதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.ட்ரெய்லர் அப்டேட் தனியாக வரவில்லை. 


அத்துடன் சேர்ந்து மேலும் இரண்டு அப்டேட்டுகள் வந்திருக்கிறது. வாரிசு படத்தை பார்த்த சென்சார் போர்டு யு சான்றிதழ் கொடுத்திருக்கிறது. குடும்ப படம் என்பதால் யு சான்று கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை. படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் என்று மூன்றாவது அப்டேட் கொடுத்திருக்கிறார்கள்.


சுமார் 3 மணிநேரம் தளபதியை பெரிய திரையில் பார்த்து ரசிக்கலாம் என ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஒரு அப்டேட் கேட்டதற்கு மூன்று அப்டேட்டா, இது போதுமே இது போதுமே இனி எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லையே என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வாரிசு படம் என்னவோ ஜனவரி 12ம் தேதி தான் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் விஜய் ரசிகர்கள் தற்போதே கொண்டாடத்தை ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement