• Jul 25 2025

நம்மால் முடிந்ததை மட்டும் கட்டுப்படுத்துங்கள்- புது வருடத்தை முன்னிட்டு சமந்தா போட்ட லேட்டஸ்ட் பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

 தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொமிகளிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக யசோதா என்னும் திரைப்படம் வெளியாகியிந்தது.

இப்படத்தில் வாடகைத் தாயாக நடிகை சமந்தா நடித்துள்ளார்.இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்தனர்.'யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்தனர். ஹரி-ஹரீஷ்  இப்படத்தில் இயக்குநர்களாக பணிபுரிந்தனர்.


இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "செயல்படு முன்னோக்கி... நம்மால் முடிந்ததைக் கட்டுப்படுத்துங்கள்!!

புதிய மற்றும் எளிதான தீர்மானங்களுக்கான நேரம் இது என்று யூகிக்கவும்.. நம்மீது அன்பாகவும் மென்மையாகவும் இருக்கும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இனிய 2023!!" என சமந்தா பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement