• Jul 24 2025

இந்த பொங்கல் இருபெரு திருவிழா- விஜய் - அஜித்துக்கு ஒரே போஸ்டர் அடித்து கொண்டாடும் ரசிகர்கள்- பார்க்க நல்லாதானய்யா இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருப்பவர்கள் தான் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரின் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்பங்கள் உருவாகி வருகின்றது.  இந்த இரண்டு படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

சுமார் 9 வருடங்களுக்கு பின் அஜித் - விஜய்யின் படங்கள் பண்டிகை நாளை குறிவைத்து, ஒரே நாளில் வெளியாக உள்ளதால், இருதரப்பு ரசிகர்களும், இந்த இரண்டு படங்களையும் வரவேற்க தயாராக உள்ளனர். இருப்பினும் அடிக்கடி தமக்குள் மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


தற்போது வெளியாகியுள்ள தகவலின் இரு நடிகர்களுக்கும் கோலிவுட் திரையுலகில் அதிக ரசிகர்கள் உள்ளதால், திரையரங்குகள் சமமாக பிரித்து, 400 திரையரங்குகள் வாரிசுக்கு, 400 திரையரங்குகள் துணிவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு படங்களுக்கும், மிகவும் பரபரப்பாக புரமோஷன் பணிகள் நடந்து  வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் தான் 'வாரிசு' படத்திற்கு ரயிலில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்ததாக விஜய் ரசிகர்கள் அந்த  புகைப்படங்களை வெளியிட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.


ஆனால் அதே அஜித் ரசிகர் தற்பொழுது விஜய் - அஜித்துக்கு ஒரே போஸ்டர் அடித்து... இரு படங்களும் பொங்கலுக்கு வெளியாவது, இருபெரு திருவிழா என்றும், இந்த பொங்கலை சும்மா செய்றோம் என ஒட்டியுள்ளனர்.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 


Advertisement

Advertisement