• Jul 25 2025

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார் ? எதிர்பாராததை எதிர்பாருங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்பானகட்டத்தை நோக்கி நகருகின்றது.21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறிவிட்டதால் 16 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜிபி முத்து சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.

இவர்களில் ரசிகர்களின் வெறுப்பை அதிகமாக பெற்ற போட்டியாளராக அசல் இருந்தார்.அவர் பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் நடந்துகொண்ட விதம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

எனவே அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இவ்வாறானநிலையில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய அசல் தான் யாரிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போதுஅசால் கோலார் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே அசல் உள்ளே செல்வார் என்றும் ஒரு தகவல் பரவி வருகின்றது. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கின்றது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement