• Jul 24 2025

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது ..? வெளியானது தகவல்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தீபாவளி கொண்டாட்டமாக இயக்குநர் K V அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ரியாபோஷப்கா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான்  'பிரின்ஸ்' 

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரேன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநர் K V அனுதீப் இயக்கத்தில், தீபாவளி கொண்டாட்டமாக, வெளியான திரைப்படம்  தான் 'ப்ரின்ஸ்'.

காதலும் காமெடியும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், முழுமையான ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் அனைவரையும் கவர வைத்தது.

மேலும்  ஒரு தமிழ் பையன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கும் எளிமையான கதை. அன்பு (சிவகார்த்திகேயன்), ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறான். அதே பள்ளியில், ஜெசிகா (மரியா ரியாபோஷப்கா) ஆங்கிலம் கற்பிக்கிறார்.

ஜாதிக்கு எதிரானவராக வாழும் உலகநாதன் (சத்யராஜ்) தன் மகன் ஜாதியை விட்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்.மேலும்   இந்நிலையில் ஜாதிக்கெதிராக மட்டுமல்லாமல் முற்றிலும் வேறொரு நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அப்பா எதிர்க்க மாட்டார் என நினைக்கிறான் அன்பு. அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

உலகநாதன் ஆங்கிலேயர்களால் தனது தந்தை கொல்லப்பட்டதால் பிரிட்டிஷ்காரர்களை முற்றிலுமாக வெறுக்கிறார். இதனால் தன் மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அன்பு தனது காதலில் எப்படி ஜெயிக்கிறான் என்பது தான் 'ப்ரின்ஸ்' படம்.

அத்தோடு தீபாவளி வெளியீடாக வெளியான பிரின்ஸ் தற்போது உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது. நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படத்தை அனைவரும் கண்டுகளிக்கலாம். 


Advertisement

Advertisement