• Jul 24 2025

72வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நம்ம சூப்பர் ஸ்டார்- சமூக வலைத்தளத்தை கலக்கும் பிறந்தநாள் காமென் டிபி!

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ்  சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலரம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவர் இன்றைய தினம் தனதுஎ 72 ஆவது பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடவுள்ளார். இதனால் இவருடைய பிறந்தநாள் காமன் டிபி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இவருடைய ரசிகர்கள் அவருடைய புகைப்படங்கள் மற்றும் காமன் டிபி வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவருடைய ரசிகர்கள் கேக் வெட்டி தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினிகாந்துக்கு கூறுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இந்த முறையும் பல ரசிகர்கள் அவருடைய வீட்டின் முன்னர் குவிந்து வழக்கம் போல் தங்களின் வாழ்த்து மழையை பொழிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எனினும், தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதிலும் ரஜினிகாந்த் எங்காவது வெளியூருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில்,இந்த முறையும் வெளியில் செல்வாரா? அல்லது ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற வீட்டில் இருப்பாரா என்பது தெரியவில்லை.


தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், 'ஜெயிலர்' படம் உருவாகி வந்தாலும், அந்த படத்தின் ரிலீசுக்கு  முன்னதாகவே, இந்த வாரம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவான பாபா திரைப்படம், ரீ ரிலீஸ் செய்யப்பட்டு... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement