• Jul 24 2025

திடீரென நிறுத்தப்படும் எழிலில் திருமணம்- கோபி எடுத்த முடிவு-பாக்யாவால் பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் மற்றும் வர்ஷினிக்கு ஈஸ்வரியின் கட்டாயத்தால் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. எழிலுக்குத் திருமணம் எனத் தெரியாமல் மண்டபத்திற்கு வந்த அமிர்தா எழில் மேடையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.

தொடர்ந்து அமிர்தாவை பார்த்த ஈஸ்வரி அவளை வெளியே அழைத்துச் சென்று தவறாக பேசி அமிர்தாவை அசிங்கப்படுத்துகிறார்.எழில், வர்ஷினி திருமணத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


அதாவது பாக்கியா என்னை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டீர்கள் இருவரது வாழ்க்கையும் மோசமாக அமைந்தது. தற்போது என்னுடைய மகன் விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணம் செய்து கொள்கிறான் என சொல்ல இதை யோசிக்கும் கோபி தன்னுடைய மகனது வாழ்க்கை தன்னைப்போல் அமைந்துவிடக் கூடாது என முடிவெடுத்து இது கல்யாணத்தை நிறுத்த போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


இன்னொரு புறம் சீரியல் நடிகர் ஜீவா பணத்தை கொண்டு வந்து கொடுத்து இந்த கல்யாணத்தை நிறுத்தப் போகிறார் என தகவல் பரவி வருகிறது. இதனால் இந்த இரண்டு விஷயத்தில் எது உண்மை? என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement