• Jul 25 2025

மீண்டும் சீரியலுக்கு வரும் பிரபல சீரியல் நடிகை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜி தமிழில் மிகவும் பிரபலமாக,சுவாரிசயமாக ஒடிய சீரியல்களில் ஒன்று பூவே பூச்சூடவா. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. முதல் சீரியலிலேயே, தனக்கென்று ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார் என்றே சொல்லலாம்.

இந்த  சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் மதனை-யே காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். கடந்த வருடம் தான் இருவருக்கும் கோலகலமாக திருமணமும் நிறைவடைந்தது. 

இதன் பின்னர்  கலர்ஸ் தமிழில் தன் கணவருடன் சேர்ந்து அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வந்தார். கலர்ஸ் தமிழ் ஒளிப்பரப்பிய அத்தனை சீரியல்களை நிறுத்தியதால், இந்த சீரியலும் சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.

அந்தவகையில் மீண்டும் எப்போது சீரியலில் வருவார் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, மிக விரைவில் என்று பதில் அளித்துள்ளார். எப்படியும் அவருடைய புதிய சீரியலின் அனோன்ஸ்மெண்ட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காத்திருந்து பார்ப்போம்.




Advertisement

Advertisement