• Jul 25 2025

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா கதாநாயகன்- அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர். கணவரால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்மணி அந்த தாக்கத்தில் இருந்து வெளியே வந்து தனது குடும்பத்தை தைரியமாக எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதே கதை.

குடும்பத்தில் நிறைய பிரச்சனைகளை கணவர் வெளியேறிய பின் சந்தித்து வருகிறார். எனினும் இப்போது கூட மகள் சரியான மார்க் வாங்கவில்லை, கிடைப்பதாக இருந்த கான்டிராக்ட் கிடைககவில்லை, மகன் எழில் வேலை போனது என அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்திக்கிறார் பாக்கியலட்சுமி

அடுத்தடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

மேலும் இந்த தொடரில் செழியன் கதாபாத்திர ஆள் மாற்றம் நடந்தது, இப்போது எழில் கதாபாத்திர மாற்றம் நடக்குமோ என பேசப்படுகிறது.அத்தோடு  காரணம் எழில் வேடத்தில் நடிக்கும் விஷால் எமோன் என்ற படத்தில் நடித்துள்ளாராம், படமும் வரும் ஜனவரி 8ம் தேதி வெளியாக இருக்கிறதாம்.

இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக அதனை விஷால் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.எனினும்  அதற்கு அனைவரும் வாழ்த்து கூறி வர இதற்கு மேல் தொடரில் நடிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஷாலுக்கு இந்த சீரியல் மூலம் பிரபலமடைய நிறைய பட வாய்ப்புகள் வருவதாக சொல்லப்படுகின்றது.ஆனால் விஷால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து வெளியேறுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.





Advertisement

Advertisement