• Jul 24 2025

ஓவரா பேசுனா இனிமேல் இதுதான் நடக்குமோ- விஜய் கூறிய குட்டிக் கதையை ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்- கடும் கோபத்தில் தளபதி ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வழக்கம் போல் தனது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியாகவே பல விஷயங்கள் விஜய் செய்தார்.

அதில் ஒன்று தான் குட்டி கதை. வழக்கம் போல் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் கூறுவது போல் இந்த விழாவிலும் குடும்பத்தின் அன்பு குறித்து ஒரு குட்டி கதையை கூறினார். இந்த குட்டி கதை விஜய் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், இந்த காலத்து 2k கிடஸுக்கு விஜய் ஒரு பூமர் அங்கிளாக தெரிந்துவிட்டாரோ என்னமோ.


அவர் கூறிய குட்டி கதையை வைத்து ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். இப்படியெல்லாம் அட்வைஸ் செய்ததால், விஜய்யின் குட்டி கதையை ட்ரோல் செய்து அதனை வீடியோவாகவே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.இதனால் தளபதி ரசிகர்கள் செம கடுப்படைந்துள்ளனர்.

மேலும் நடிகர் விஜய் இது தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றனது என்பதும் குறிப்பிடத்தக்கது.









Advertisement

Advertisement