• Jul 26 2025

பாக்கியலட்சுமி சீரியல் கோபி போட்ட முக்கிய பதிவு- அடடே அதுக்குள்ளே இவ்வளவு வந்திருச்சா?- அசந்து போன ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் கூட முன்னணியில் நிற்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. இப்போது கோபி ராதிகாவுடன் வாழ்ந்து வருகின்றார். இப்பாவை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போக வேண்டும் என இனியாவும் கோபி வீட்டிலேயே இருந்து விட்டார்.

இது ஒரு புறம் இருக்கு எழிலுக்கு தெரியாமல் வர்சினியைத் திருமணம் செய்து வைக்க ஈஸ்வரி திட்டம் போட்டு விட்டார். இதனால் அமிர்வுடன் திருமணம் நடக்குமா அல்லது வர்ஷினியைத் தான் எழில் திருமணம் செய்வாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி செய்து வந்த சமையல் காண்ட்ராக்ட் பணி தற்போது சிக்கலை சந்தித்து மீண்டு எழுந்து வருகிறது.  ஆனால் கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் பார்த்து வருகின்றார் பாக்கியா.


இப்படி ஒரு இல்லத்தரசின் கதையாக இல்லத்தரசியின் போராட்டம் மிக்க வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.

இப்படி குடும்ப ஆடியன்ஸ் மிகவும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றாக மாறியிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.  இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது 700 எபிசோடுகள் நிறைவடைந்து இருக்கின்றன. இதை கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் தமது சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement