• Jul 24 2025

பாக்கியலட்சுமி சீரியல் இனியா வீட்டில் நடந்த விஷேசம்- அடடே அதுக்குள்ள வளர்ந்திட்டாங்களா?- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. ராதிகா தான் தன்னுடைய  வாழ்க்கைக்கு ஏற்ற பொண்ணு என்று நம்பி இரண்டாவது திருமணம் செய்த கோபி கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி இழந்து வருகின்றார்.


அதிலும் ராதிகா வரவர வில்லியாகவே மாறி விட்டார் பாக்கியாவிடம் இருந்து எப்படியாவது குடும்பத்தை பிரிதது விடவேண்டும் என்றும் முனைப்புக் காட்டி வருகின்றார்.அத்தோடு இனியா அடிக்கடி பாக்கியா வீட்டிற்குச் சென்று வருவதும் பிடிக்கவில்லை. ஆனால் பாக்கியா இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது கெரியரில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகின்றார்.


சீரியல் இப்படி விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் போது இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.அந்த வகையில் இதில் இனியா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நேகா. பள்ளி மாணவியாக நடித்து வரும் இவர் பட்டதாரி ஆவார்.


இப்படியான நிலையில் கடந்த இரண்டு நாளுக்கு முதல் நேகா தன்னுடைய தங்கையின் பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement