• Jul 25 2025

சீரியலை விட்டு வெளியேற முடிவெடுத்த தனம்- அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்றாகும். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடும் இந்த சீரியல் அண்ணன்-தம்பிகளுக்கு இடையிலான பாசத்தையே எடுத்துக்காட்டுகின்றது.மேலும் இந்த சீரியல் தற்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இந்த நிலையில் இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதாவிற்கு மட்டும் அண்மையில் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் அவர் சமீபத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக கூற அவர் வெளியேறினால் கதை நன்றாக இருக்காது, அவரது கதாபாத்திரத்தில் வேறொரு வந்தால் எப்படி என யோசித்த தயாரிப்பு குழு அவரை சமாதானப்படுத்தி சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement