• Jul 24 2025

நாளை முதல் அதே நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்! மீனா கேரக்டரில் மீண்டும் ஹேமா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் நாளை முதல் அதே நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது 5 ஆண்டுகளை கடந்து அக்டோபர் மாதத்திலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து இத் தொடரின் இரண்டாவது பாகமும் அக்டோபர் மாதம்  அதாவது நாளைய தினமே ஆரம்பிக்கப்படவுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்  தொடரின் முதல் சீசன் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை கதைக்களமாக எடுத்துக் கொண்ட இயக்குநர், இரண்டாவது சீசனில் தந்தை -மகன்கள் பாசத்தை மையமாக கொண்டு எடுத்துள்ளார். அதன்படி,  இரண்டாவது சீசனின் கதைக்களம் முதல் சீசனிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அவரது மகன்கள், மகள்கள் என களைகட்டும் ப்ரமோக்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த தொடரில் முதல் சீசனில் மீனாவாக நடித்திருந்த ஹேமா மீண்டும் இத் தொடரில் மீனாவாகவே களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

கடந்த சீசனிலிருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வது சீசன் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது கேரக்டரை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




 

Advertisement

Advertisement