• Jul 25 2025

உடல் எடையை அதிகரித்து ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோபோ ஷங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது அவர் உடல் மெலிந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருந்தார்.


தற்போது ரோபோ ஷங்கர் மீண்டும் உடல் எடையை ஏற்றி மதுரையில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். அதற்காக ரோபோ ஷங்கர் தயாராகும் வீடியோ வெளியாகி இருக்கிறது.அதை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement