• Jul 25 2025

பார்த்தாலே கண் கலங்குதய்யா- ஏழை மக்களுடன் நெருக்கமாக நிற்கும் சிவகார்த்திகேயன்- ட்ரெண்டாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

மெரினா, 3, மனங்கொத்தி பறவை என சாதாரண நடிகராக வலம் வந்த சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் சட்டென ஸ்டார் நடிகராகவே மாற்றியது. இவரது நடிப்பில் இறுதியாக மாவீரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அடுத்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நேற்றைய தினம் தனது குடும்பத்தாருடன் தனது 13 வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். 


அத்தோடு தனது மனைவியுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என் சந்தோஷ கண்ணீரே என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.


இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஏழை மக்களுடன் மக்களாக நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடதத்தக்கது.

Advertisement

Advertisement