• Jul 24 2025

காதலை மையப்படுத்தி படம் இயக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம்- ஓபனாக உண்மையை உடைத்த director-nelson-dilipkumar

stella / 1 year ago

Advertisement

Listen News!


கோலமாவு கோகிலா படத்தின்மூலம்தான் தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் தான் நெல்சன் திலீப் குமார்.இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்ததோடு படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

 தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்திருந்தார் நெல்சன். இந்தப் படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. எப்போதும் தன்னுடைய படங்களில் அலப்பறையை கூட்டும் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் அமைதியான மற்றும் அழுத்தமான கேரக்டரை வெளிப்படுத்தியிருந்தார். 


அடுத்தடுத்த இந்தப் படங்கள் கொடுத்த வெற்றியால், நேரடியாக விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கைக்கூடியது. ஆனால் இந்தக் கூட்டணி நெல்சனுக்கு கைக்கொடுக்கவில்லை. மேலும் பீஸ்ட் படம் சொதப்பியது. கலவையான விமர்சனங்களை மட்டுமில்லாமல் அதிகமான ட்ரோல்களையும் நெல்சனுக்கு இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது.

இருப்பினும் சோர்வடையாத நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோடு பலரும் நெல்சனைப் பாராட்டி வருகின்றனர்.  இந்த நிலையில் நெல்சன் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் உங்கள் காதல் கதை பற்றி சொல்லுங்க என்று கேட்ட போது என் ப்ரெண்டோட ப்ரெண்ட் அவங்க அப்பிடி அறிமுகமாகி லவ் பண்ண ஆரம்பிச்சோம்.


லவ் பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லையே கல்யாணமும் பண்ணிக் கிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏன் நீங்க காதல் கதை கொண்ட திரைப்படங்கள் எடுப்பதில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த ஜெனரேசன் கமர்சியல் படங்களை எதிர்பார்ப்பதால் தான் அப்பிடி படங்களை இயக்ககின்றேன். மற்றும் படி காதல் படங்களை இயக்கக் கூடாது என்றெல்லாம் இல்ல என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


Advertisement

Advertisement