• Jul 25 2025

நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னால் புரியுமா..? சௌந்தர்யாவை நினைவு கூர்ந்த பார்த்திபன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா முதல் இந்தி திரையுலகம் வரை முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை சௌந்தர்யா. அந்தவகையில் இவர் 1993ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் ஜோடியாக பொன்னுமணி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சௌந்தர்யா, 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா பாட்டின் மூலம் இன்றளவும் அறியப்படுகிறார்.


சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்த இவர் 2003ஆம் ஆண்டு ரகு எனும் பொறியாளரை மணந்து திருமண வாழ்வில் செட்டில் ஆனார். அதன் பின் சமூகசேவைப் பணிகள் மற்றும் அரசியல் களத்தில் பிஸியானார்.


அந்தவகையில்  2004ஆம் ஆண்டு பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்காக கரீம்நகரிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்த சௌந்தர்யா, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்தார். தன் 27 வயதில், கர்ப்பிணியாக இருந்தபோது விமான விபத்தில் சிக்கி நடிகை சௌந்தர்யா அகால மரணமடைந்தது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் இன்று வரை கவலைப்பட வைத்து வருகிறது.


இந்நிலையில் நேற்று முன் தினம் சௌந்தர்யாவின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனால் சௌந்தர்யாவை நினைவுகூர்ந்து நடிகர் பார்த்திபன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சௌந்தர்யாவுடன் அந்தப்புரம், இவன் ஆகிய படங்களில் சௌந்தர்யாவுடன் ஜோடி சேர்ந்து பார்த்திபன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் "நினைவு தினம்? நினைவு  தினம்!" எனக் குறிப்பிட்டு நடிகை சௌந்தர்யாவின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Advertisement

Advertisement