• Jul 25 2025

உயிருக்குப் போராடும் முல்லை... டாக்டர் கூறியதைக் கேட்டு கதறி அழுத கதிர்... கோபத்தில் திட்டிய பார்வதி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய சீரியலாக தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பது குறித்துப் பார்ப்போம்.

அந்தவகையில் இந்த தொடரில் விபத்தில் சிக்கிய முல்லை தற்போது மருத்துவமனையில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த தனம் குடும்பத்தினர் அனைவரும் ஜீவாவுக்கு ஆறுதல் கூறி என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர். 


அதற்கு கதிர் கண்கலங்கி அழுதப்படியே "தெரியலங்க, முல்லைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க" என்று கூறுகின்றார். மேலும் "வார்ட் உள்ளே போகிறதுக்கு முன்பே முல்லைக்கு நினைவு இல்லாமல் தான் போனாங்க, ஆனால் இப்ப எப்படி இருக்குன்னு எனக்கு தெரியல" எனவும் கூறி கதறி கதறி அழுகின்றார். 

அந்த சமயத்தில் டாக்டர் வருகின்றார். அவரிடம் முல்லை குறித்து அனைவரும் விசாரிக்கின்றனர். அதற்கு டாக்டர் "முல்லை ஆபத்தான கட்டத்தில் தான் இப்பவும் இருக்காங்க. அதனால் எதுவும் என்னால இப்ப சொல்ல முடியாதுன்னு" கூறுகின்றார். கதிர் அழுகையை அடக்க முடியாது அழுகின்றார். பின்பு முல்லையின் அப்பாவும் அம்மாவும் வந்து என்ன நடந்தது எனக் கதிரிடம் கேட்டு அவர்களும் அழுகின்றனர்.


அதற்கு அங்கு நின்றவர்கள் "ஆக்சிடன்ட் ஆயிட்டுன்னு"  சொல்கின்றனர். உடனே பார்வதி "கார்ல மாசமா இருக்கிற பொண்ண கூட்டிட்டு வரும்போது பார்த்து வர மாட்டீங்களா?" என்று கதிரை திட்டுகின்றார். பின்பு தனம் பார்வதிக்கு ஆறுதல் கூறி சமாதானப் படுத்துகின்றார்.

மறுபுறம் மீண்டும் டாக்டர் வர டாக்டரிடம் பார்வதி "முல்லை நிலைமை இப்போ எப்படி இருக்குன்னு" கேட்டு கண்கலங்கி அழுகிறார். அதற்கு டாக்டர் "முல்லை இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்காங்க. வயித்துல ரொம்ப அடி பலமா பட்டு இருக்கு. ஆனா குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்ல. குழந்தை நல்லா தான் இருக்கு. ரத்தம் நிறைய போய் இருக்கு அவங்களுக்கு ரத்தம் ஏத்தணும்" என்கிறார்.

மேலும் "குழந்தையை எப்படியும் இன்னைக்கு ஆபரேஷன் பண்ணி வெளியே எடுத்திடனும். அதுக்கு அவங்க குடும்பத்துக்காரங்க கையெழுத்து போட்டு கொடுங்க" எனவும் கூறி செல்கின்றார் டாக்டர். பின்பு கதிரிடம் வந்து நர்ஸ் கையெழுத்து கேட்க, கதிர் அழுதப்படியே கையெழுத்து போட்டு கொடுக்கின்றார்.


அதனைத் தொடர்ந்து கதிர் முல்லைக்கு ரத்தம் கொடுப்பதற்காக போகிறார். கதிரைத் தொடர்ந்து ஜீவாவும், கண்ணனும் ரத்தம் கொடுக்கின்றனர். மறுபுறம் தனமும் பார்வதியும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டபடி அங்கு அழுது கொண்டே இருக்கின்றனர். பின்பு பார்வதி "ஊர் உலகத்தில் எல்லாருக்கும் கல்யாணம் முடியுது. குழந்தை பெத்துக்கறாங்க. ஆனா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல ஆனா என் பொண்ணுக்கு மட்டும் தான் எல்லா சந்தோஷத்துக்கும் பெரிய அளவில போராட வேண்டியது இருக்கு. எதுக்காக இப்படி நடக்குதுன்னு தெரியல" என்று கூறி மீண்டும் அழுகின்றார். தனமும் ஆறுதல் கூறியபடியே இருக்கின்றார்.

இவ்வாறாக இன்றைய எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement