• Jul 24 2025

பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய பதான்....சல்மான் கான் படத்தின் முதல் நாள் வசூலே இவ்வளவு தானா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ரம்ஜான் பண்டிகையை டார்கெட் செய்து நேற்று வெளியான சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கிய நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ஆவது முதல் நாளில் மிகப்பெரிய வேட்டையை நடத்தும் என எதிர்பார்த்த நிலையில், அதிலும் பயங்கர அடியாம்.அஜித், தமன்னா நடிப்பில் வெளியான வீரம் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் இந்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் திரைப்படம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை ரீமேக் செய்த நிலையில், பாலிவுட் ரசிகர்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

சல்மான் கான் எவ்ளோ பெரிய ஸ்டாராக இருந்தாலும், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ் டகுபதி, ஷெனாஸ் கில், ஜகபதி பாபு, பாலக் திவாரி மற்றும் நட்புக்காக ராம்சரண் என பல ஸ்டார்கள் உள்ள இந்த படத்துக்கு பல வட இந்திய மீடியாக்கள் வெறும் ஒரு ஸ்டார் ரேட்டிங் கொடுத்து படத்தை பங்கம் பண்ணி உள்ளனர்.

சல்மான் கானுக்கு இருக்கும் மிகப்பெரிய ஃபேன் பேஸ் மொக்கைப் படமாக இருந்தாலும் முதல் நாள் வசூலில் மாஸ் காட்டும் என எதிர்பார்த்த நிலையில், அதிலும் சல்மான் கானுக்கு தோல்வி முகம் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.சல்மான் கான் நடிப்பில் நேற்று வெளியான கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் முதல் நாளில் வெறும் 12.5 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளன.

பாகுபலி, கேஜிஎஃப் 2, புஷ்பா உள்ளிட்ட தென்னிந்திய படங்களே இதை விட முதல் நாளில் பெரிய வசூல் வேட்டையை இந்தி பெல்ட்டில் முதல் நாளில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் லால் சிங் சத்தா படமே முதல் நாளில் 14 கோடி வரை வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய படங்கள் இந்தி பெல்ட்டில் முதல் நாள் செய்த வசூல் சாதனையை ஜனவரி 25ம் தேதி வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் அசால்ட்டாக முறியடித்தது. அந்த படத்தில் சல்மான் கானின் சில நிமிட கேமியோ காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ஸ் ஆக்கியது.

பதான் படத்தை போலவே சல்மான் கான் படமும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தும் என எதிர்பார்த்த நிலையில், வீரம் படத்தின் ரீமேக் படத்திற்கு பெரியளவில் பாலிவுட் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது.

வெள்ளிக்கிழமை வெளியான சல்மான் கானின் புதிய படம் ரம்ஜான் பண்டிகையான இன்று நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சல்மான் கான் படம் பெரிய வசூலை ஈட்டினாலும் அதன் பட்ஜெட்டையாவது டோட்டல் ரன்னிங்கில் அள்ளுமா என்பது கேள்விக் குறிதான் .

கிஸி கா பாய் கிஸி ஜான் படம் சல்மான் கானுக்கு கை கொடுக்கவில்லை என்றால் அடுத்து அவர் நடிப்பில் ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் டைகர் 3 படம் பாக்ஸ் ஆபிஸில் அசுர சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement