• Jul 25 2025

விரைவில் ரசிகர்களை சந்திக்க போகும் மக்கள் நாயகன் அசீம்! வெளியானது தகவல்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் 6-வது சீசனின் தமிழ் நிகழ்ச்சி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு ஷிவின், விக்ரமன், அசீம் ஆகிய மூன்று பேரும் தேர்வாகி இருந்தார்கள் . 

பலரும் விக்ரம், ஷிவின் இருவரில் யாராவது ஒருவர் வெற்றிபெறுவார்கள் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், அசீம் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.

விக்ரமன் முதல் ரன்னர் அப் ஆகவும் ,ஷிவின் இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற அசீம்-க்கு 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அசீம் வெற்றி பெற்ற 50 லட்சத்தில் கொரோனா காலத்தில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு கல்வயின் உதவிக்கு கொடுப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வின்னர் ரசிகர்களால் அன்புடன் மக்கள் நாயகன் என அழைக்கப்படும் அசீம் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளாராம். அட ஆமாங்க ரசிகர்களை  சந்திக்க  திட்டமிட்டுள்ளாராம். விரைவில் எங்கு நடக்கப்போகிறது எந்த இடம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அசீம் ” தனக்கு மக்கள் நாயகன் பட்டம் பிடித்துள்ளது என்றும், தான் நடிக்கவுள்ள படத்திற்கான பெரிய அப்டேட் ஒன்று இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement