• Jul 26 2025

அதைப் பெரிதாக காட்ட அறுவைச் சிகிச்சை செய்ய சொன்ன இயக்குநர்.. பரபரப்பை கிளப்பிய சூர்யா பட நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'மெய்னி தில் துஜ்கோ தியா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதுமட்டுமல்லாது இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வாரணம் ஆயிரம்' என்ற படத்திலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.


இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வந்த சமீரா ரெட்டி, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். அதன் பின்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கின்ற சமீராவுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். 


சமீரா நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 

அதாவது அதில் அவர் கூறுகையில், படத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் ஒன்றில் கலந்து கொண்டபோது பாலிவுட் இயக்குநர் ஒருவர் தன்னை பார்வையால் துளைத்ததாகவும், தன்னுடைய மார்பை அழகாகவும், பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அந்த இயக்குநர் கூறியதாகவும் சமீரா தெரிவித்துள்ளார்.


ஆனால் அதற்கு நடிகை சமீரா மறுப்பு தெரிவித்துள்ளாராம். இவ்வாறு மார்பை பெரியதாக காட்ட அறுவை சிகிச்சை செய்வதற்கு மறுத்தாலும், மார்பகத்தை பெரியதாக காட்ட சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் சமீரா. இருப்பினும் அறுவை சிகிச்சை செய்ய சொல்லி அந்த இயக்குநரால் தான் வலியுறுத்தப்பட்டதாகவும், கடவுள் அருளால் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் ஓபனாக கூறியுள்ளார் சமீரா.


அதுமட்டுமல்லாது மார்பை பெரியதாக காட்ட தான் எடுத்த சிறு முயற்சிகளை கூட செய்யாமல் இருந்திருக்கலாம் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமீரா. இவ்வாறு பாலிவுட் சினிமா குறித்து நடிகை சமீரா பகிர்ந்துள்ள இந்த பகீர் குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement