• Jul 26 2025

மற்றுமோர் பிரபல நடிகையும் விவாகரத்தா..? டெலீட் செய்யப்பட்ட கணவரின் புகைப்படங்கள்.. வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்பிரபலங்களைப் பொறுத்தவரையில் எந்தளவிற்கு எந்தளவு எந்தளவு காதலித்து கல்யாணம் பண்ணுகிறார்களோ அந்தளவிற்கு அந்தளவு கூடிய சீக்கிரமே விவாகரத்து பெற்றுப் பிரிந்தும் விடுகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோரது விவாகரத்து பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதனையடுத்து தற்போது சிரஞ்சீவியின் தம்பி மகளான நடிகை நிஹாரிகாவும் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.


அதாவது நிஹாரிகா Chaitanya Jonnalagadda என்ற நபரை டிசம்பர் 2020ல் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இருப்பினும் இந்த மண வாழ்க்கையை இவர்கள் எதிர்பார்த்தளவிற்கு சந்தோஷத்தைக் கொடுக்காமையினால் கருத்து வேறுபாடுகள் பலவும் இடம்பெற்று வந்திருந்தன.


அதன் ஆரம்ப கட்டமாக அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துவிட்ட நிலையில் தற்போது நிஹாரிகா அவரது கணவரின் போட்டோக்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்.


இதன் வாயிலாக இவர்களின் விவாகரத்து தற்போது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கின்றது.  இந்த விடயமானது அவரின் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement