• Jul 25 2025

ஆத்தா இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்த சுந்தரி- கிருஷ்ணா எடுத்த முடிவு -உண்மை எல்லாம் அறிந்த அனுவின் அம்மா

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்பிடியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் சுந்தரியின் அம்மாவை யாரோ கடத்தி வைத்திருக்கின்றனர். இதனால் சுந்தரி ஆத்தாவை தேடி அலைந்து கொண்டு திரிந்தார்.இப்போது ஆத்தா இருக்கும் இடத்தையும் கண்டு பிடித்து விட்டார்.

அத்தோடு கிருஷ்ணாவும் சுந்தரியின் அம்மாவுக்கு கோல் பண்ணி சுந்தரியின் அம்மா கடத்தப்பட்ட விடயத்தையும் கூறி விட்டார். இதனால் சுந்தரி எப்படி தன்னுடைய ஆத்தாவைக் காப்பாற்றுவார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement