• Jul 24 2025

வடிவேலுவுக்கும் மாரி செல்வராஜுக்கும் பிளாஸ்டிக் சேர்- உதயநிதிக்கு மட்டும் சோபா- வைரலாகும் புகைப்படத்தால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மாமன்னன். இப்படம் இதுவரை 40 கோடி வரை வசூலை எட்டியதாக சொல்லப்படுகின்றது. படம் ரிலீசுக்கு முன்பிருந்து ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன பின்னரும் அந்த படத்தை பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடாக தெரியவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனும் வலிமையான சமூக நீதியை மாமன்னன் படம் பேசிய நிலையில், மக்கள் மத்தியில் அந்த படத்துக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினை வைத்தே இப்படியொரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கியது பெரிய விஷயம் என பலரும் பாராட்டி வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த தனபாலின் கதை என்றும் எடப்பாடி தான் வில்லன் பகத் ஃபாசில் ரோல் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் மாமன்னன் படத்தை சுற்றி ஓடின.


இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் சோபாவில் உட்கார்ந்திருக்க வடிவேலு மற்றும் மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரும் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து இருப்பது போன்ற போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.


ஆனால், இது உதயநிதி வீடு இல்லை என்றும் வடிவேலு வீட்டில் தான் உதயநிதியை சோபாவில் உட்கார வைத்து வடிவேலு அழகு பார்த்துள்ளார் என்றும் உதயநிதியின் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர். தனது வலியைத் தான் மாரி செல்வராஜ் படத்தில் வைத்திருக்கிறார் என்றும் இந்த நிலை மாறணும் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement