• Jul 25 2025

உயிரை மாய்க்கப் போன ரசிகரைக் காப்பாற்றிய ஏ.ஆர் ரகுமான்- கண்கலங்க வைக்கும் உண்மைச் சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இந்திய திரையுலகையே தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை ஜாம்பவானாக இருக்கும் இவர் இறுதியாக மாமன்னன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.மாமன்னன் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தும் இருந்தது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான். அவரின் இசையால் ஒருவர் தற்கொலை முடிவை கைவிட்ட சம்பவம் ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது.அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.மலேசியாவை சேர்ந்தவர் செல்வகுமார், இவர் ஒரு இசைக்கலைஞர் ஆவார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி நள்ளிரவு தற்கொலை செய்யப்போனாராம். அப்போது அவருக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில் அண்ணே ஏ.ஆர்.ரகுமானின் இந்த ஆல்பத்தை கேளுங்க, கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு சொல்லி ஓகே கண்மணி படத்தின் பாடல்களை அனுப்பி வைத்துள்ளார் ஒருவர்.


அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற ‘நானே வருகிறேன்’ என்கிற பாடலில் வரும் ‘பொல்லாத என் இதயம்’ என்கிற வரிகளை கேட்டதும் என்னுடைய மனம் மாறியது. இதையடுத்து என்னுடைய வீட்டுக்கு சென்று ஹெட்போனை மாட்டிக்கொண்டு அந்தப் பாடலை 48 மணிநேரம் திரும்ப திரும்ப கேட்டேன். அதன்பின்னர் தான் சாகக்கூடிய இடத்தில் நான் இல்லை என்பதை உணர்ந்தேன். அந்தப்பாடல் என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றியது. என்னைப் பொறுத்தவரை அது பாடல் அல்ல வாழ்க்கை.


அதில் வரும் சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே என்கிற வரிகளை கேட்டது நான் மனம்விட்டு அழுது என்னுடைய வலிகளை போக்கினேன். அதன்பின்னர் தான் இந்த வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்தேன். என்னுடைய இசை பயணத்தில் நிறைய தோல்விகளை சந்தித்து இருந்தாலும், அதிலிருந்து ஒருநாள் மீண்டு வந்துவிடுவேன் என்கிற நம்பிக்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். 


ஒரு பாடல் மூலம் என்னுடைய வாழ்க்கையை மீட்டெடுத்ததற்கு நன்றி குருவே என அந்த நபர் ஏ.ஆர்.ரகுமானை டுவிட்டரில் டேக் செய்துள்ளார். ரசிகரின் இந்த பதிவைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த ஏ.ஆர்.ரகுமான், அதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன்” என அந்த ரசிகரை மனம்திறந்து வாழ்த்தி இருக்கிறார் இசைப்புயல். மேலும் அந்த நபர் ARR என தன்னுடைய கையில் பச்சைக் குத்தி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement