• Jul 25 2025

பிளக் அன்ட் வயிற் கண்ணு உன்னை பார்த்தா கலரா மாறுது- செம கிளாமர் லுக்கில் நடிகை சமந்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. தமிழில் அண்மையில்  வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றியடைந்தாலும், அந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவுக்கு அவர் மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார்.


 இதனால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார் சமந்தா.பின்னர் பல்வேறு சிகிச்சைகளை எடுத்தபின்னர் அதிலிருந்து படிப்படியாக குணமாகி வரும் சமந்தா, தற்போது விஜய் தேவர் கொண்டாவுடன் இரணந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இதுதவிர சமந்தா நடித்துள்ள சரித்திர படமான சகுந்தலமும்  வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளிலும் தற்போது படு பிசியாக இயங்கி வருகிறார் சமந்தா. 


இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, நேற்று உடற்பயிற்சி செய்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிட்டிருந்தார். இதனை அடுத்து பிளக் அன்ட் வயிற் கலரில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement