• Jul 26 2025

காதலர் தினத்தன்று பொன்னியின் செல்வன் படக்குழு செய்யவுள்ள முக்கிய விஷயம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான ஒரு திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இவரின் கனவு திரைப்படமான இப்படமானது கடந்த வருடம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.


அதாவது கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டயராக சரத்குமாரும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்து அசத்தியிருந்தனர்.


மிகப்பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு, சிறந்த விமர்சனங்களும் கிடைத்தமையை தொடர்ந்து வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனையை புரிந்திருந்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ஆவது பாகம் தற்போது உருவாகி வருகின்றது. அந்தவகையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாது இதற்கான அறிவிப்பு வீடியோ கூட சில வாரங்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

அதாவது ஜெயம் ரவி ஏற்று நடிக்கும் அருள் மொழி வர்மன் கதாபாத்திரத்தின் காதல் காட்சியின் பாடல் என்பதால் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement