• Jul 26 2025

கல்லூரிக்கு இப்படியா போவீங்க.. உடையை வைத்து நயன்தாராவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவினுடைய லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே அது நம்ம நயன்தாரா தான். திரைத்துறையில் எந்தளவிற்கு எந்தளவு சாதனைகளை புரிந்திருக்கின்றாரோ அந்தளவிற்கு அந்தளவு தடைகள், மற்றும் சரிவுகளையும் கடந்து வந்திருக்கின்றார்.


அதாவது காதல், திருமணம், குழந்தை என அனைத்துப் படி நிலைகளிலும் பல சர்ச்சைகளைத் தாண்டி வந்திருக்கின்றார். குடும்பம், குழந்தை என செட்டில் ஆகி விட்டாலும் தற்போதும் சினிமாவில் படு பிசியாக நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அந்தவகையில் சமீபகாலமாக நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 


அந்தவகையில் கடைசியாக இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியானது. ஆனால் இந்தப் படமானது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தமையால் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. இதைதொடர்ந்து இவர், அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தற்போது நடிக்கிறார்.


இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா, சென்னையில் உள்ள பிரபல கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்விற்கு அவர் சேலையில் படு கிளாமராக சென்றுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் "கல்லூரி விழாவிற்கு இந்த மாதிரியா ஆடை அணிந்து செல்வீர்கள்" என்று கேட்டு நயன்தாராவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.    


Advertisement

Advertisement