• Jul 25 2025

நான் தோற்று விட்டேனா அதற்கு நான் காரணமில்லை?- கேலி செய்தவர்களுக்கு முதன் முறையாக பதிலடி கொடுத்த பூஜா ஹெக்டே-

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே . தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புக்கள் அமையாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழைிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி அதில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார்.

 அவர் நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் கம்பேக் கொடுத்த பீஸ்ட் படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதனால் பட வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.அதன் பின் பூஜா தெலுங்கில் நடித்த ஆச்சார்யா, ராதே ஷியாம் போன்ற படங்களும் தோல்வி அடைந்தன.


இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பூஜா ஹெக்டேவிடம் கேட்டதற்கு "நான் தோல்வி அடையவில்லை, படங்கள் தான் தோற்றுவிட்டது. நான் என்ன அந்த படத்தின் இயக்குநரா இல்லை எடிட்டரா" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.


100% உழைப்பை கொடுத்துவிட்டதாகவும், தோல்விக்கு நான் காரணமில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். இவரின் அந்த பாசிடிவ் எனர்ஜிக்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்குளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement