• Jul 24 2025

பொன்னியின் செல்வன் ப்ரமோஷனை தஞ்சாவூரில் வைக்காததற்கு இது தான் காரணம்- ஓபனாகப் பேசிய கார்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலு இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


 பொன்னியின் செல்வன் படக்குழு நேற்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது தஞ்சாவூருக்கு படக்குழு செல்லாதது தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு கார்த்தி அளித்த பதில், "பொன்னியின் செல்வன்-1 படத்தின் டீசர் லாஞ்ச் தஞ்சாவூரில்தான் வெளியிட திட்டமிட்டிருந்தோம்.


 ஆனால் கொரொனா மூன்றாவது அலை ஆரம்பித்ததால் அங்கு நடத்த முடியவில்லை. மேலும் புரோமோஷனுக்கும் செல்ல முடியவில்லை. பொன்னியின் செல்வன் 2 புரோமோஷனுக்கு நிச்சயம் நாங்கள் தஞ்சாவூருக்கு செல்வோம். அந்தத் திட்டம் எங்களிடம் இருக்கிறது" என்றார்.


Advertisement

Advertisement