• Jul 25 2025

வைர கடிகாரத்தால் கழுத்தை அலங்கரித்த பாப் பாடகி.. விலை இத்தனைகோடிகளா? வைரலாகும் புகைப்படம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அமெரிக்காவின் பிரபல டாப் பாடகியாக வலம் வருபவர் ரிஹானா. இவர் பாடகியாக மட்டுமல்லாமல் நடிகை, பேஷன் டிசைனர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

இவர் குட் கியாள் கோன் பேட், ரேட்டட் ஆர், லவுட், டால்க் தேட் டால்க் போன்ற பல ஆல்பம் பாடல்கள் பாடி புகழ் பெற்றார். "Umbrella" என்ற இசை ஆல்பம் மூலம் இவர் முதல் கிராமி விருதை பெற்றார்.

இந்நிலையில், பாடகி ரிஹானா பாரிசில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கழுத்தில் கைக்கடிகாரம் போன்று இருக்கும் வைர நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். 

30 கேரட் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த நெக்லஸ் இந்திய மதிப்பின் படி ரூ. 5.7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ரிஹானாவின் நெக்லஸ் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாக உள்ளது.




Advertisement

Advertisement