• Jul 25 2025

ரச்சிதா என்னை விட்டு பிரிய அவ மட்டும் தான் முக்கிய காரணம்- உண்மையை போட்டுடைத்த தினேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை ரச்சிதா. அதிலும் இவரை பிரபல்யமாக்கியது சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் தான். இதற்கு பிறகும் சில சீரியல்களில் நடித்த இவர் கடந்த ஆண்டு முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்குபற்றியிருந்தார்.

இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பரைக் காதலித்து திருமணம் செய்திருந்தார். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முதல் தனது கணவர் தவறான பதிவுகளை தனக்கு அனுப்பியிருப்பதாக ரச்சிதா போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.


இது பற்றி போலீஸ் தினேஷிடம் விசாரித்த போது, ரச்சிதா உள்நோக்கத்தோடு இந்த புகார் அளித்து இருக்கிறார், அவர் சட்டப்படி என்னிடம் விவகாரத்து பெற்றுக்கொள்ளட்டும் என கூறிவிட்டு வந்திருக்கிறார்.அதன் பின் இன்ஸ்டாக்ராமில் "My dear friends and well wishers. I am absolutely fine. Nothing hurts me except my goodness" என பதிவிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.அதில் ரச்சிதாவுக்கும் எனக்கும் இடையில் பிரச்சினை வருவதற்கு ஒரு டப்பிங் ஆட்டிஸ்ட் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது ஜீ ஜீ என்று சொல்லப்படும் அந்த பெண் ரச்சிதாவுக்கு நல்ல தோழியாக இருப்பதோடு ரச்சிதா பல முடிவுகளை எடுப்பதற்கு அவரே காரணமாகவும் இருந்திருக்கிறார்.


எனக்கு அவங்களையும் தெரியும் அவங்க குடும்பத்தையும் தெரியும். கண்டிப்பாக அவங்க தான் நம்ம ரெண்டு பேரோட பிரிவுக்கு காரணம். அவங்க தான் ரச்சிதா குளோஸ் பிரண்ட் என்றும் தினேஷ் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement