• Jul 25 2025

'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து திடீரென விலகும் பிரபல நடிகர்... அடக் கடவுளே இவரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


அந்தவகையில் இந்த சீரியலில் குணசேகரன் ஆதிரைக்கு வலுக்கட்டாயமாக கரிகாலனுடன் கல்யாணம் பண்ணி வைத்துள்ளார். இதனை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறப் போவதாக தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது எஸ் கே ஆரின் கடைசி தம்பியாக ஆதிரைக்கு ஜோடியாக நடித்து வந்த அருண் தான் வெளியேற இருக்கின்றார்.


அந்தவகையில் 'எதிர்நீச்சல்' சீரியலில் தன்னுடைய கதாபாத்திரத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்ற காரணத்தினால் தான் அவர் வெளியேற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement