• Jul 25 2025

CWC நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர், நடிகை... வச்ச கண் வாங்காமல் ஹீரோயினை பார்த்தபடி நின்ற புகழ்... ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு என்றுமே பஞ்சம் இருப்பதில்லை.


அந்தவகையில் இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்தவாரம் நடுவர்களிடம் இருந்து குறைந்த மதிப்பெண்கள் பெற்ற கஜேஷ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.


இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளனர். அதில் இவர்கள் இருவருமே நிகழ்ச்சி பற்றிப் பேசுகின்றனர்.


அந்த சமயத்தில் சித்தி இத்னானி பேசும் போது புகழ் கை தட்டியவாறு கண் இமைக்காமல் அவரையே வச்ச கண் வாங்காமல் பார்த்தபடி நிற்கின்றார். பின்னர் புகழை அங்கிருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து கலாய்க்கின்றனர். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement