• Jul 26 2025

கவுண்டமணியிடம் இத்தனை கோடி சொத்து இருக்கா? வெளியான தகவலால் வாயடைத்துப்போன ரசிகர்கள்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 1939ம் ஆண்டு பிறந்த காமெடி கிங் கவுண்டமணி இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த கவுண்டமணி சமீபத்தில் ஒரு படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி ஷூட்டிங் சென்று வருகிறார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஒரு படத்தில் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்தன.

 கவுண்டமணி - செந்தில் காமெடி காட்சிகள் இன்னமும் ஆதித்யா டிவி போன்ற பல காமெடி சேனல்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தோடு வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என சொல்வது போல பல ரசிகர்களை துன்பத்தில் இருந்து விலக்கி சந்தோஷமாக வாழ வைக்கவும் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் உதவி செய்து வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் , கவுண்டமணியின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 1964ம் ஆண்டு நாகேஷ் ஹீரோவாக நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் கார் டிரைவராக சின்ன ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமான கவுண்டமணி பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

அத்தோடு 1977ம் ஆண்டு முதல் தற்போது வரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கலக்கிய கவுண்டமணி பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார்.

நாகேஷுக்கு பின்னர் அதிக சம்பளம் வாங்கிய நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த கவுண்டமணி 40 முதல் 50 கோடி சொத்து மதிப்புடன் செல்வ செழிப்புடன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement