• Jul 24 2025

சந்திரமுகி 2 படக்குழுவுடன் இணைந்த பிரபல நடிகைகள்.! ஒரே புகைப்படத்தால் உடைந்த ரகசியம்..

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான சந்திரமுகி 2 ஆம்  பாகத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பி.வாசு இயக்க லைகா புரொடக்ஷன்ஸின் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். 

எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு முன்பே வெளியிட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்த படத்தில் லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோரில் ஒருவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக முன்னதாக கிசுகிசுக்கப்பட்டது.

 இப்போது, ​​​​இப்படத்தில் ஜோதிகாவின் சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தான் நடிக்கிறார்.

இந்த நிலையில், கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட அந்த நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. அட ஆமாங்க…. ‘சந்திரமுகி 2’ படக்குழுவுடன் மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்பொது, இவர்கள் அனைவரும் நடித்து வந்துள்ள ரகசியம்  இந்த ஒரே புகைப்படத்தால் தெரியவந்துள்ளது.

சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதில், ஒருபக்கம் வைகை புயல் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் இருக்கும் புகைப்படம் ரசிங்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement