• Jul 25 2025

அஜித் கை விட்டால் என்ன..? மாமாக்குட்டி நாயகனை அசால்ட்டாக அள்ளித் தூக்கிய விக்னேஷ் சிவன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான விக்னேஷ் சிவன் தனது 6-ஆவது படத்தினை அஜித்தை வைத்து இயக்கப் போவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், திடீரென அவர் அப்படத்திலிருந்து விலகி விட்டார். இதையடுத்து விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை யாரை வைத்து இயக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.


இந்நிலையில் விக்கியின் 6-ஆவது படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து ஆக்‌ஷன் கதையம்சத்தை மையமாக கொண்ட படம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு தகவல் வெளிவந்திருந்தது.


இதனைத் தொடர்ந்து அப்படம் குறித்த மற்றுமோர் தகவல் வெளிவந்திருக்கின்றது. அதன்படி அப்படத்தில் மேலும் ஒரு ஹீரோ நாயகனாக நடிக்க உள்ளதாகவும், விக்கி இப்படத்தை டபுள் ஹீரோ சப்ஜெக்ட்  ஆக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது அந்த மற்றொரு ஹீரோ வேறு யாருமில்லையாம். கடந்த ஆண்டு இறுதியில் கோலிவுட்டே மெச்சும் அளவுக்கு 'லவ் டுடே' என்ற படத்தை சிறிய பட்ஜெட்டில் எடுத்து பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தான் எனக் கூறப்படுகின்றன.


தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய பிரதீப் ரங்கநாதனை தன் படத்தில் நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கி உள்ளாராம் விக்கி. மேலும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement